பயன்படாத கிணறு

Update: 2026-04-26 13:56 GMT

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய்மலை அடிவாரம் பகுதியில் ஊர் பொதுக்கிணறு உள்ளது. இந்த கிணறு முழுவதிலும் செடி, கொடி, மரங்கள் முளைத்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மேலும் அதன் சுற்றுச்சுவர் இடிந்து உள்ளே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு கிணற்றில் செடி, கொடி, முட்களை அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்