விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகின்றது. இதனால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் செல்லும் இடங்களுக்கு நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.