பயணிகள் அவதி

Update: 2026-04-26 12:49 GMT

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிலையம் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பயணிகள் அமரும் இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமில்லாமல் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் பஸ்சுக்காக காத்து நிற்பதால் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்