திருவள்ளூர் மாவட்டம் நாரவாரிகுப்பம் வேணு கோபால்சாமி கோவில் தெருவில் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. குழந்தைகள் அங்கன்வாடி மையம் மற்றும் அங்குள்ள கோவில் பகுதிகளில் இரவில் மர்ம நபர்கள் மது குடித்துவிட்டு மதுபாட்டில்கலை அங்கேயே போட்டுவிடுகின்றனர். இதனால் அங்கு குழந்தைகள் வர முடியாமலும், பொது மக்கள் முகம் சுழிக்கும்படியும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சிதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.