தெருநாய்கள் தொல்லை

Update: 2026-03-08 16:36 GMT

மதுரை நகர் மாடக்குளம் பகுதியில் தெருநாய்கள் சாலையில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். மேலும் தெருநாய்கள் சாலையில் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்