தெருநாய்கள் தொல்லை

Update: 2026-03-08 15:22 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சிநகர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் ெதருநாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகள் மிகவும் அல்லல்படுகின்றனர். குரைத்தபடியும், சண்டையிட்டு கொண்டும் வாகன ஓட்டிகள் மீது விழுகின்றன. இதனால் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்