பழுதான மின்மோட்டார்

Update: 2026-03-08 11:57 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சேலம்-அரூர் சாலையில் உள்ள பட்டுகோணாம்பட்டி ஊராட்சி காளிப்பேட்டை செட்டியார் தெருவில் ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிறது. பலமுறை உள்ளாட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்