பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடம்

Update: 2026-03-08 10:47 GMT

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கே.பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் கிராமத்தில் அரசு கட்டிடம் கட்டப்பட்டு 6 வருடங்களான நிலையில், தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் புதர் மண்டி காட்சியளிக்கிறது. இந்நிலையில் இப்பகுதியில் புதிய பகுதிநேர ரேஷன் கடை தனிநபர் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. வாடகை பணம் செலுத்துவதற்காக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரரிடமும் மாதம் ரூ.200 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன்கருதி பயன்பாட்டில் இல்லாத அரசு கட்டிடத்தில் ரேஷன் கடையை இயங்க செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்