விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தெருநாய்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த தெருநாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் கடிப்பதுடன் வாகன ஓட்டிகளையும் விபத்துக்குள்ளாக்கி செல்கின்றது. இவ்வாறு தொடர் தொல்லையில் ஈடுபடும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.