பாலக்கோடு அடுத்த அமானிமல்லாபுரம் கிராமத்தில் பல மாதங்களாக பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் பராமரிப்பின்றி காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்வதில்லை. எனவே அதிகாரிகள் செல்போன் கோபுரத்தை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.