அரூரில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களில் செல்வது அதிகரித்துள்ளது. பஸ் நிலையம், கச்சேரிமேடு, திரு.வி.க. நகர், கடைவீதி உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிளில் 4 பேர் அமர்ந்து சாலைகளில் வேகமாக செல்கின்றனர். ேமலும் இவர்கள் சாகச பயணம் செய்து வருகின்றனர். இதனால் சாலையில் செல்வோர் மிகவும் அச்சம் அடைகின்றனர். மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.