ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் சாலையில் ஒன்றை ஒன்று தாக்கி சண்டையிட்டு கொள்கின்றன. மேலும் வாகனஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.