விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதோடு சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், வீட்டின் அருகே விளையாடும் குழந்தைகளை கடித்தும் குதறுகின்றது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தொல்லை தரும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?