ஈரோடு முனிசிபல் காலனி கல்யாண விநாயகர் கோவில் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?