கோவில்பட்டி அண்ணா பஸ் நிலைய நுழைவு பகுதியில் ராட்சத பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பஸ்களின் படிக்கட்டுகள் தரையில் மோதி சேதமடைகின்றன. பயணிகளும் காயமடைகின்றனர். எனவே ஆபத்தான பள்ளத்தை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.