மதுபிரியர்கள் தொல்லை

Update: 2026-01-18 14:13 GMT

பள்ளிபாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள பிளாட்பாரங்களில் மற்றும் மேம்பாலத்துக்கு அடியில் மது போதையில் சிலர் அரைகுறை ஆடையுடன் படுத்து கிடக்கின்றனர். இது அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், மாணவிகளுக்கும் தொல்லையாக இருக்கிறது. மேலும் சிலர் சாலையில் படுத்து இருப்பதால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

மேலும் செய்திகள்