பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி பகுதிகளில் தினமும் மாலை நேரங்களில் சாலை ஓரத்தில் சில்லி சிக்கன் மற்றும் மட்டன் உள்ளிட்டவைகளை தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்கின்றனர். இவ்வாறு செய்யும் இறைச்சி உணவு வகைகள் தரமற்ற முறையில் இருப்பதால் அதை வாங்கி உண்ணும் மக்கள் கடும் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.