ஏரிகரைக்கு தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2026-01-18 13:59 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், நவலை ஊராட்சிக்கு உட்பட்டது சின்னா கவுண்டம்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு செல்லும் தார்சாலையில் சித்தேரி கரை வழியாக பல கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்த சித்தேரி கரை பகுதியில் பாதுகாப்பு தடுப்பு சுவர்கள் இல்லாததால் சாலையில் செல்லும் வாகனங்கள், வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சின்னா கவுண்டம்பட்டி சித்தேரி கரைப்பகுதியில் இருபுறங்களிலும் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்