ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நாய்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஒன்றை ஒன்று தாக்கி சண்டையிடுவதுடன், சாலையில் நடந்து செல்பவர்களை கடிக்க முற்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.