அரியலூர் நகரப் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தெருநாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.