கோத்தகிரி காந்தி மைதானத்தில் தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் மைதானத்தின் ஒரு பகுதி முழுவதும் புற்கள் வளர்ந்து மேடு, பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் வீரர்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே மைதானத்தில் உள்ள புற்களை அகற்றி சமன்படுத்தி பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.