கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் ராக்லேண்ட் தெருவுக்கு திரும்பும் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் இடது புறம் தடுப்புகள் இல்லாததால் இரவில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது வடிகாலுக்குள் வாகனங்கள் சிக்கி விடுகின்றன. அத்துடன் பொதுமக்களும் கால் தவறி வடிகாலுக்குள் விழும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வடிகால் கரையோரம் தடுப்புகள் அமைக்க வேண்டும்.