கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2026-01-18 10:40 GMT

அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தின் வழியாக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பொய்யூர் கிராமத்தின் அருகே சாலையின் நடுவே அதிகளவில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளுக்கு நேர விரயமும் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் சாலையின் நடுவே நிற்கும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கால்நடைகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்