தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்

Update: 2026-01-18 10:37 GMT

அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் - முனியங்குறிச்சி செல்லும் முதன்மை சாலையில் உள்ள சேலத்தார்காடு கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தின் வழியாக தினமும் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அரியலூருக்கு இருசக்கர வாகனங்களிலும் மற்றும் நடந்தும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர். இந்த கிராமத்தின் முதன்மை சாலையில் பாலம் முதல் நாகமங்கலம் பிரிவு சாலை வரை உள்ள தெருவிளக்குகள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே எரியாமல் உள்ள தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்