பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் மதுபாட்டில்கள் வாங்கும் மதுப்பிரியர்கள் சிலர் பஸ் நிலைய வளாகத்தில் திறந்த வெளியில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் அவர்கள் மது போதையில் ஆடை களைந்து நிலையில் பாதையில் கிடக்கின்றனர். சிலர் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்துநிற்கும் பயணிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மதுப்பிரியர்கள் மது அருந்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.