சேலம் ஊராட்சி ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் முட்கள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் சுடுகாட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சுடுகாட்டில் உள்ள முட்புதர்களை அகற்றி, மழைநீர் தேங்காமல் இருக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.