சேலம் மாவட்டம் கெங்கவல்லி-வீரகனூர் செல்லும் சாலை தெடாவூர் ஆட்டு சந்தை அருகே சாலையோரத்தில் புளியமரம் காய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள புளிய மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.