விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்

Update: 2026-01-04 16:04 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது கடுமையான பனி நிலவுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பலதரப்பட்ட நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது. எனவே அரசு கால்நடைத்துறை அதிகாரிகள் பனியினால் ஏற்படும் நோய்த் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தக்க ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்