கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பாரதி நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் கம்பிகள் வெளியே தெரிகின்றன. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே மின்கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.