விருதுநகர் மாவட்டம் சாத்தூர் 6-வது வார்டில் அமைந்துள்ள பொதுகழிப்பறை முறையான பராமரிப்புகள் இன்றி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இங்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த கழிப்பறையை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?