விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை அகற்றி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.