கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.