சுகாதார சீர்கேடு

Update: 2026-01-04 12:42 GMT

குளச்சல் அருகே எரிசினாப்பள்ளி பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால், இங்குள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட துறையினர் முறையாக அகற்றுவதில்லை. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே, மக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்