அரியலூர் நகரில் உள்ள செந்துறை செல்லும் சாலை பகுதியில் ஏராளமான கடைகள், பள்ளிகள், வீடுகள் அமைந்துள்ளன. மேலும் செந்துறை உள்பட மாவட்டத்தின் பிற முக்கிய பகுதிகளுக்கு செல்லவும் இந்த சாலையை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த சாலையில் போதுமான அளவில் தெருவிளக்குகள் இல்லாமல் உள்ளது. இதனால் இரவுவில் இந்த சாலையானது இருள் சூழ்ந்து காணப்படுவதால், எதிரே வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.