பாலப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2026-01-04 11:51 GMT

அரியலூர் மாவட்டம் தளவாய் செங்கமேடு அருகே உள்ள மதுரா நகர் பகுதியில் உப்பு ஓடை செல்கிறது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் செல்லும். இதனால் இப்பகுதி மக்கள் இந்த ஓடையில் உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்த முடியாமல் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த ஓடையில் மேம்பாலம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்