செம்பனார்கோவில் பகுதி திருக்கடையூர் அருகே அபிஷேக கட்டளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை வயல்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதன்காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.