சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதிகளில் உள்ள சாலைகளில் சில வாலிபர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் எதிரே வரும் மற்ற வாகனஓட்டிகள் அச்சமடைவதோடு, சில நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு அதிவேகத்தில் பயணிப்பவர்களால் நடைபாதையினரும் பெருமளவில் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.