சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் ரோடு மாரியம்மன் நகரில் குடிநீர் தொட்டி கட்டி பல மாதங்கள் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக சில தினங்களுக்கு முன்பு இணைப்புகள் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது. எனவே தங்கள் பகுதி புகாரினை நாளிதழில் வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.