புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2026-01-04 09:48 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லியில் இருந்து மூலைக்கடை வழியாக எருமாடு செல்லும் சாலைேயாரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அந்த சாலை வனச்சாலை போல காட்சி அளிக்கிறது. எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடிவது இல்லை. புதரில் வனவிலங்குகள் மறைந்து இருந்தால் கூட தெரியாது. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.  

மேலும் செய்திகள்