கொடுமுடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் வாகனங்களுக்கு முறையான வாகன நிறுத்தம் வசதி இல்லை. இதனால் இங்கு வரும் வாகனங்கள் சாலைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. விபத்து மற்றும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே கோவில் பகுதியில் வாகன நிறுத்தம் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?