கரூர் மாவட்டம் நொய்யல் அருகே குளத்துப்பாளையம் பகுதியில் அப்பகுதி பெண்களின் நலன்கருதி பெண்களுக்கான சுகாதார கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த சுகாதார கழிவறையை குளத்துப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் தினமும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார கழிவறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக சுகாதார கழிவறையில் உள்ள பிளாஸ்டிக் குழாய்கள் பழுதடைந்தது. இதன் காரணமாக வெளியேறும் கழிவுநீர் வெளியே செல்ல முடியாமல் கழிவறைக்குள் தேங்கி நின்றது. இதனால் கழிவறையை பூட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சுகாதார கழிவறையை பயன்படுத்த முடியாமல், கடும் அவதிடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கழிவுநீர் பிளாஸ்டிக் குழாயை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.