கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அரசு அலுவலகங்களும், பள்ளிகளும், அரசு கலைக் கல்லூரியும் உள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் வேலைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் அனைத்தும் ஏ.வி.எம். கார்னர் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று செல்கிறது. இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் வெயில், மழை காலங்களில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அரவக்குறிச்சியில் கரூர் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.