விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

Update: 2025-12-28 16:42 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதியில் விவசாய பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. காய்கறி செடிகளில் பூ பூத்தவுடன் அப்படியே கருகி விடுகிறது. முருங்கைச் செடிகளில் அதிக அளவு பூ உதிர்தல் நடைபெறுகிறது. இந்தப் பனிப்பொழிவில் இருந்து பயிர்களை பாதுகாக்க அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊராட்சி வாரியாக முகாம் அமைத்து விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்