சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் இருந்து முள்ளுவாடி கேட் செல்லும் சாலையின் இடதுபுறம் ரெயில்வே தண்டவாளங்கள் செல்கின்றன. இந்நிலையில் தண்டவாளத்தின் இருபுறமும் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் மதுபிரியர்கள் தடுப்புச்சுவரை தாண்டி சென்று, தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். ரெயில் வரும்போது மதுபோதையில் சிலர் விபத்தில் பலியாகின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.