சத்தியமங்கலம் அருகே உள்ள இக்கரை நெகமம் ஊராட்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் மிகவும் அச்சத்தில் உள்ளார்கள். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.