திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டது. இதனால் பகல் நேரங்களில் கால்நடைகளும், இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களும் தீயணைப்பு நிலையத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால் தீயணைப்பு வீரர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீயணைப்பு நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.