கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இரவு வேளையில் சாலையிலேயே மாடுகள் படுத்து கிடப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.