பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ரோவர் சாலை சந்திக்கும் இடத்தில் ரெங்கா நகர் பிரியும் பகுதியில் மூன்று பிரதான சாலைகள் சந்திக்கின்றன. இப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் சிறப்பு வகுப்புகள் முடிந்து வரும் போது இருட்டில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே மூன்று பிரதான சாலை சந்திக்கும் பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.