கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறையில் உள்ள சிறப்பாறை ஓடையை நாணல் செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் ஓடையில் முறையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. மேலும் கொசுத்தொல்லையும் அதிகம் உள்ளது. எனவே ஓடையை ஆக்கிரமித்த நாணல் செடிகளை உடனே அகற்ற வேண்டும்.