‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-12-28 14:02 GMT

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையில் 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் கூட்ட நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுடன் பொருட்களை பெற்று சென்றனர். இதனால் இந்த ரேஷன் கடையை பிரித்து செங்குணம்(கிழக்கு) அண்ணா நகர் பகுதியில் உள்ள சிறுதானிய கிடங்கு கட்டிடத்தில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய ரேஷன் கடையை அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்